பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் கவலையும், தூக்கம் மறந்த கண்களின் கருவளையமும் பிரச்சினையின் தீவிரத்தை உறுதிசெய்தன. தன் மகளுக்கு மூன்று வயதில் ஏற்பட்ட வ-ப்பு நோயால் பேச்சுத்திறன் பறிபோன சோகத்தின் சுமையை இறக்கிவைத்தார். தன் மழலைச் செல்வத்திற்கு பேச்சு வருமா என்பதை அறிவதற்காக பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். பாலக்காடு வடக்கன்கரை பகவதியை வணங்கி, சோழிகளில் பதில் தேடினார் கிருஷ்னன் நம்பூதிரி.

Advertisment

ஊமை ராசியாகிய மீனத்தில் புதன் பரம நீசப் பாகையிலமர்ந்து, வாக்கு ஸ்தானாதிபதியும், செவ்வாயும் பலமிழந்ததால் ஏற்பட்ட பிரச்சினை என்பதை பிரசன்னம் சுட்டிக்காட்டியது. வலிப்பு நோய்க்குக் காரகனாகிய சனிபகவானின் பங்களிப்பும் தீவிரத்தைக் கூட்டியது. பிரசன்னத்தில், ஒன்பதாம் பாவம் ஆறாமிடத்துடன் தொடர்புபெற்றதால், தந்தையின் கர்மவினையால்தான் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. துன்பக்கடலில் தள்ளி, தூயவனாக மாற்றும் அம்பிகையின் திருவிளையாடலை நினைத்து மெய் சிலிர்த்துப் போனார் கிருஷ்ணன் நம்பூதிரி. ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியின் நவாட்சரி மந்திரத்தை குழந்தைக்கு அருகிலிருந்து ஜெபித்தாலும், மூக பஞ்ச சதி பாராயணம் செய்தாலும் நோய் தீருமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது.

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பொதுவாக ஜோதிடத்தில் நவகிரகங்களை மட்டுமே வைத்து ஜாதகக் கணிதம் செய்யும் வழக்கமுள்ளது. கேரள ஜோதிடர்கள் உபகிரக ஸ்புடங்களையும் ஆராய்ந்தே பலன் சொல்கிறார்கள். உபகிரகங்களின் சேர்க்கையால், நவகிரகங்களின் குணாதிசயங்கள் மாறிவிடும் என்பதே உண்மை.

காலன், பரிவேடன், தூமன், அர்த்தப்பிரகணன், எமகண்டகன், இந்திர தனுசு, மாந்தி, வியதீபாதன், உபகேது ஆகிய ஒன்பது முக்கியமான துணைக் கோள் களே கிரக- பாவப்பலன்களை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு, உபகிரகங்களில் அதிக வலிமையுள்ள குளிகன் சூரியனுடன் சேர்ந்தால், ஜாதகரின் தந்தைக்கு மாரகத் தைத் தருவான். சந்திரனுடன் சேர்ந்தால் தாய்க்குக் கெடுதல். செவ்வாயுடன் சேர சகோதர தோஷம் வரும். புதனுடன் கூடினால் மந்தபுத்தி உண்டாகும். குருவுடன் தொடர்பு கொண்டால் ஆன்மிகத்தில் தடையுண்டாகும். சுக்கிரனுடன் சம்பந்தப்பட் டால் தகாத உறவுண்டாகும். சனிபகவானுடன் கூடினால் அற்பாயுள் தரும். ராகுவுடன் சேர்ந்தால் விஷத்தால் மரணம்; கேதுவுடன் ஒருமித்தால் தீயால் மரணம் ஆகியவையே பலனாக அமையும்.

குளிகனுக்கு நேர் எதிர்மாறாக, நல்ல பலன்களை அதிகம் தருவது எமகண்டகன் என்னும் உபகிரகம். எமகண்டக நேரம் நல்ல நேரம் என்பதே ஜோதிட ரகசியம். உபகிரகங் களின் தன்மையைக்கொண்டு பலன் சொல்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

மனநோய் தீருமா?

கேள்வி: என் மகள் இரண்டாண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாள். மருத்துவ சிகிச்சையளித்தும் பயனில்லை. என் மகளின் மனநோய் தீருமா? அதற்கான பரிகாரத்தையும் கூறமுடியுமா?

-அருணாசலம், விழுப்புரம்.

(ஆரூட எண்- 50; ஹஸ்தம் இரண்டாம் பாதம்)

* சோழி லக்னம், சந்திரனின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. அதற்கு 64-ஆவது நவாம்சத்தில் மனோகாரகனாகிய சந்திரன் இருப்பது மனநோயைக் காட்டுகிறது.

Advertisment

kj

* சனி பகவான் திருவோணத்திலும், ராகு ரோகிணியிலும் அமைந்துள்ளன. சோழி லக்னத்திற்கு திரிகோணத்தில் இருப்பதால் மனநோயின் தீவிரம் உணர்த்தப்படுகிறது. நவாம்சத்திலும் ராகு, சனி சேர்க்கை கெடுதலையே காட்டுகிறது.

* சோழி லக்னம் அமைந்த கன்னி ராசிக்கு விரயாதிபதியாகிய சூரியன் வர்க்கோத்தமம் பெற்று, புத்திக்குக் காரகனாகிய புதன் நட்சத்திரத்தில் அமர்வதும், புதன் மீனத்தில் பரம நீசகதியிலிருப்பதும் ரகசிய பயத்தால் மனம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தெளிவாக்குகிறது.

* பரிகாரம் செய்தால் குரு பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் நோய்நீங்கும் வாய்ப்புண்டு.

பரிகாரம்

திங்கட்கிழமை சந்திர ஹோரையில், திருத்தேவன்குடி கற்கடேஸ்வரரை வழிபட்டால் நலம்பெறலாம்.

பௌர்ணமியில் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதியை வழிபட்டால் மனநோய் விலகும்.